/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
200 ஆண்டு பழமையான புளியமரம் அகற்றம்
/
200 ஆண்டு பழமையான புளியமரம் அகற்றம்
ADDED : நவ 23, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
200 ஆண்டு பழமையான
புளியமரம் அகற்றம்
கிருஷ்ணகிரி, நவ. 23-
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பொறியியல் கல்லுாரி எதிரில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து திருப்பத்துார் செல்லும் சாலையில், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வரை, 8 கி.மீ., துாரம் வரை நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பர்கூர் சமுதாயக்கூடம் எதிரில் இருந்த, 200 ஆண்டுகள் பழமையான புளியமரத்தை நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். பல தலைமுறைகளாக இருந்த புளியமரத்தை அகற்றும் பணியை அப்பகுதியில் வசிப்போர், சிறிதுநேரம் நின்று பார்த்துவிட்டு சோகத்துடன் சென்றனர்.

