/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழிப்பறையில் பொருட்களை வைத்த ரேஷன் கடை ஊழியர் 'சஸ்பெண்ட்'
/
கழிப்பறையில் பொருட்களை வைத்த ரேஷன் கடை ஊழியர் 'சஸ்பெண்ட்'
கழிப்பறையில் பொருட்களை வைத்த ரேஷன் கடை ஊழியர் 'சஸ்பெண்ட்'
கழிப்பறையில் பொருட்களை வைத்த ரேஷன் கடை ஊழியர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 25, 2025 12:55 AM
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பழைய டெம்பிள் ஹட்கோ பகுதி
யில் செயல்பட்டு வந்த, 6ம் நம்பர் ரேஷன் கடை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறைக்கு சொந்தமான மலர் வணிக வளாகத்தில் உள்ள, 14ம் எண் கடையில் தற்காலிகமாக செயல்பட்டது. அக்கடையின் ரேஷன் பொருட்களை அருகிலிருந்த கழிப்பறையில் வைத்தது குறித்து நேற்று நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இது தொடர்பாக நேற்று கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நடராஜன் வெளியிட்ட அறிக்கை:
சம்பந்தப்பட்ட கடை, கெலமங்கலம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டில் இயங்கியது. கடந்த, 23 மாலை, 5:30 மணியளவில் வந்த ரேஷன் பொருட்களை வைக்க இடமின்றி, விற்பனையாளர் முத்துமாதேவன் கழிப்பறைக்கு செல்லும் பாதையில் வைத்ததாக தெரிந்தது. தகவலறிந்த அதிகாரிகள் அங்கிருந்த, 30 அரிசி மூட்டைகளையும், ஓசூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். விற்பனையாளர் முத்துமாதேவன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். புதிய கட்டட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அங்கு ரேஷன்கடை பழையபடி இயங்கும், என அதில்
தெரிவித்துள்ளார்.
ரேஷன்கடையை அரசு விதிகளுக்கு மாறாக மாற்றியதும், ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்க முடியாத அளவுள்ள கடையில், 8 மாதங்கள் கடையை நடத்தியது குறித்தும், அதிகாரிகள் தரப்பில் விசாரிக்காமல், ரேஷன் பொருட்களை விற்பனை செய்த ஊழியர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

