/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழையால் ஏரி கால்வாய் உடைந்து தண்ணீர் வீண்
/
மழையால் ஏரி கால்வாய் உடைந்து தண்ணீர் வீண்
ADDED : டிச 23, 2024 09:44 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் வேலம்பட்டி அடுத்த தட்டக்கல் பெரிய ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறும் கால்வாய் உடைந்து தண்ணீர் முழுவதும் விவசாய நிலத்தில் ஓடியது.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 338 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 597 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து கால்வாயில், 116 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 160 கன அடி என மொத்தம், 276 கன அடிநீர் திறக்கப்பட்டது. அணை மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 51.50 அடியாக நீர்மட்டம் இருந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக நெடுங்கல்லில், 59 மி.மீ., மழை பதிவானது. கே.ஆர்.பி., அணை, 53.40, பாரூர், 42, போச்சம்பள்ளி, 20, கிருஷ்ணகிரி, 19.40, பெனுகொண்டாபுரம், 3.20 என மொத்தம், 197 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

