/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் நிறுவன ஊழியர் போக்சோவில் கைது
/
தனியார் நிறுவன ஊழியர் போக்சோவில் கைது
ADDED : ஜூலை 31, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்குமார், 20; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் கடந்த, 4 மாதமாக பணியாற்றி வருகிறார்; இவர், ஓசூர் அருகே, குமுதேப்பள்ளியில் வசிக்கும் பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, தான் தங்கியிருக்கும் அறைக்கு அழைத்து சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
சிறுமியின் தாய் புகார் படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் நேற்று வழக்குப்பதிந்து, அஜய்குமாரை கைது செய்து, தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

