/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
செயற்கை மலர்களை தவிர்த்து இயற்கை மலரை பயன்படுத்த பயிற்சி
/
செயற்கை மலர்களை தவிர்த்து இயற்கை மலரை பயன்படுத்த பயிற்சி
செயற்கை மலர்களை தவிர்த்து இயற்கை மலரை பயன்படுத்த பயிற்சி
செயற்கை மலர்களை தவிர்த்து இயற்கை மலரை பயன்படுத்த பயிற்சி
ADDED : பிப் 05, 2024 11:04 AM
ஓசூர்: தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாட்டை தவிர்த்து, இயற்கையான ரோஜா, ஜெர்புரா, கிரசாந்திமம், கார்னேசன் உள்ளிட்ட பல்வேறு வகையான கொய்மலர்களை அலங்காரத்திற்கு பயன்படுத்த வலியுறுத்தி, லைட்ஹவுஸ் வெட்டிங் மற்றும் கில்ஸ் பேட்டரி என்ற அமைப்பு சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
அதன்படி, ஓசூர் அடுத்த பல்லுாரில், மலர் அலங்கார பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அதேபோல், இல்லதரசிகளுக்கு கைத்தொழிலை கற்று கொடுத்து, அதன் மூலம் வருமானம் சம்பாதிக்க செய்யும் வகையில், பெண்களுக்கு மலர் கொத்து (பொக்கே) செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, 60 பேர் பங்கேற்றனர்.
மலேசியாவில் இருந்த வந்திருந்த, மலர் தொழிலில் அனுபவம் வாய்ந்த சிவா சேர்வை என்பவர், பூ அலங்காரம் மற்றும் மலர் கொத்து செய்ய பயிற்சி அளித்தார். மேலும், பல்வேறு மலர்கள் குறித்தும், எந்தெந்த மலர்களை எந்தவிதமான அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும். எவ்வாறு மலர்களை தேர்வு செய்வது, எந்தெந்த மலர்களை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் என, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
ஏற்பாடுகளை, மணிவேல், மோனிஸ், பிரவின்தாஸ் உட்பட பலர் செய்திருந்தனர். தமிழகத்தில் அரசு விழாக்களில் இயற்கை மலர்களை மட்டுமே பயன்படுத்த அரசு உத்தரவிட, கோரிக்கை விடுக்கப்பட்டது.

