/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க கோரி தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு
/
சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க கோரி தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு
சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க கோரி தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு
சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க கோரி தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு
ADDED : அக் 09, 2024 12:45 AM
சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க கோரி
தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு
ஊத்தங்கரை, அக். 9-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சாலமரத்துப்பட்டி ஊராட்சி குருகப்பட்டி கிராம மக்கள், சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கக்கோரி தாசில்தாரிடம் மனு
அளித்தனர்.
ஊத்தங்கரையில் இருந்து ஓலப்பட்டி செல்லும் பிரதான சாலையில், குருகப்பட்டி தார்ச்சாலையின் அருகே, 10 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதை அதே கிராமத்தை சேர்ந்த நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஊர்மக்கள் ஒன்று கூடி, இறந்தவர்களின் பிரேதத்தை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என, ஊர்மக்கள் சார்பில் முடிவுசெய்து, தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள், அவ்விடத்தில் மயானமோ, தகன மேடையோ அமைக்கக்கூடாது எனக்கூறி பிரச்னை செய்து வருகின்றனர். கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.