/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிலத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் மனு
/
நிலத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் மனு
ADDED : அக் 29, 2024 01:02 AM
நிலத்தை மீட்டு தரக்கோரி
கிராம மக்கள் மனு
கிருஷ்ணகிரி, அக். 29-
பர்கூர் தாலுகா நாயக்கனுார் கிராமத்தை சேர்ந்த மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த, கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
எங்களுக்கு நாயக்கனுார் கிராமத்தில் கடந்த, 1990ல், 24 குடும்பங்களுக்கு தனித்தனி நிலப்பட்டா வழங்கப்பட்டது. அதில் நாங்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தோம். நாங்கள் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்று விடுவதால், சிலர் எங்கள் குடிசைகளை அகற்றி விட்டு, அந்த இடத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இது குறித்து கடந்த, 2018 முதல், 10 முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன், எங்களுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, எங்களின் நிலத்தை மீட்டு, மீண்டும் அளந்து கொடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.

