/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொழில்முனைவோருக்கான 'புதிய பயணம்' பயிலரங்கம்
/
தொழில்முனைவோருக்கான 'புதிய பயணம்' பயிலரங்கம்
ADDED : ஆக 08, 2025 01:13 AM
ஓசூர், ஓசூரில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 'புதிய பயணம்' என்ற தலைப்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான இரு நாள் வணிக பயிலரங்கம் நேற்று துவங்கியது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, மாவட்ட கூடுதல் கலெக்டர் கிருத்தி காம்னா, மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம் ஆகியோர் துவக்கி வைத்தனர். பயிலரங்கத்தில், தமிழக முதல்வர் கனவான, 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய, தொழில் முனைவோர் உற்பத்தியை பெருக்குவதற்கான புதிய யுக்திகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சந்திக்கும் வணிக ரீதியிலான பிரச்னைகளை அணுகுவது குறித்தும், அவற்றுக்கு தீர்வு மற்றும் தரமான உற்பத்தியை அளிப்பதற்கான அம்சங்கள் குறித்தும் விளக்கப்பட்டன. இதில், 70க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

