/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையோர மரங்களை வெட்டிய மர்ம கும்பல்
/
சாலையோர மரங்களை வெட்டிய மர்ம கும்பல்
ADDED : ஏப் 02, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சனி சந்தை பகுதியில், தர்மபுரி- - சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த, 5 மரங்களை மர்மகும்பல், இரவில் அடியோடு வெட்டி சாய்த்துள்ளனர்.
இதுகுறித்து, பாளையம் சுங்கச்சாவடி பணியாளர் ஞானசேகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பாளையம்புதுார், தொம்பரகாம்பட்டி பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரங்களை மர்ம கும்பல் வெட்டிய நிலையில், தற்போது மீண்டும் சனி சந்தை பகுதியில், 15 வருடங்களாக பராமரிக்கப்பட்ட, 5 மரங்களை மர்மகும்பல் வெட்டிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

