/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாங்கிய கடனை திருப்பி தராத விவசாயியை தாக்கியவர் கைது
/
வாங்கிய கடனை திருப்பி தராத விவசாயியை தாக்கியவர் கைது
வாங்கிய கடனை திருப்பி தராத விவசாயியை தாக்கியவர் கைது
வாங்கிய கடனை திருப்பி தராத விவசாயியை தாக்கியவர் கைது
ADDED : மே 08, 2025 12:52 AM
கிருஷ்ணகிரி,:காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளியை சேர்ந்தவர் சின்னப்பையன்,55; விவசாயி. இவர், அதேபகுதியை சேர்ந்த உறவினர்கள் சம்பத், 56, பச்சையம்மாள், 60, குப்பு, 30 ஆகியோரிடம், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், 41.40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தரவில்லை.
கடந்த, 4ல், சின்னப்பையன் விவசாய நிலத்திற்கு வந்த சம்பத், பணத்தை கேட்டு தகராறு செய்து நிலத்திற்கு போடப்பட்ட பென்சிங் வேலிகளை உடைத்து சேதப்படுத்தினார். இது குறித்து கேட்ட சின்னப்பையனையும் தாக்கினார். இது குறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் அளித்த புகார்படி சம்பத்தை, காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர்.