/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணை, அவதானப்பட்டி பூங்காவில் காதலர் தினத்தில் குவிந்த காதல் ஜோடிகள்
/
கே.ஆர்.பி., அணை, அவதானப்பட்டி பூங்காவில் காதலர் தினத்தில் குவிந்த காதல் ஜோடிகள்
கே.ஆர்.பி., அணை, அவதானப்பட்டி பூங்காவில் காதலர் தினத்தில் குவிந்த காதல் ஜோடிகள்
கே.ஆர்.பி., அணை, அவதானப்பட்டி பூங்காவில் காதலர் தினத்தில் குவிந்த காதல் ஜோடிகள்
ADDED : பிப் 15, 2024 10:39 AM
கிருஷ்ணகிரி: உலகம் முழுவதும் பிப்., 14ம் தேதி 'காதலர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்கி அன்பை பரிமாறி கொள்வது வழக்கம்.
அதையொட்டி நேற்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். அவர்கள் அணையை சுற்றி பார்த்தும், பூங்காவில் அமர்ந்தும் பொழுதை போக்கினர். காதலர்களுக்கு போட்டியாக ஏராளமான புதுமணத் தம்பதிகளும் அணை பூங்காவை சுற்றிப்பார்த்து, 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். இதையொட்டி காதலர்களை கவரும் வகையில், கே.ஆர்.பி., அணை பூங்கா அருகில், ஐஸ்கிரீம், சாக்லேட், ரோஜா பூக்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
இதேபோல், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலும் காதல் ஜோடிகள் பலரும் பொழுதை கழித்து சென்றனர். காதலர் தினத்தையொட்டி, கே.ஆர்.பி., அணை மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இளைஞர்கள் நுாதன பிரசாரம்
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'யாரும் காதலிக்க வேண்டாம்' என்பதை வலியுறுத்தும் வகையில், தங்கள் டி-சர்ட்டில் வாசகங்களுடன் கே.ஆர்.பி., அணையில் நுாதன பிரசாரம் மேற்கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டின் பின்புறம், 'பெண்களை நம்பினால் சுடுகாடு கெட்டி', 'காதல் எதுக்கு, நட்பு இருக்கு' என தமிழிலும், முன்புறம், 'நோ லவ்' என ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது.
இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, 'நாங்கள் பள்ளிப் படிப்பை முடித்து, கட்டடங்களுக்கு சென்டரிங் வேலை செய்கிறோம். எங்கள் கிராமத்தில், 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை பெண்கள் காதலித்து, திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டு, வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டனர். இதனால், பாதிக்கப்பட்ட நாங்கள், 'யாரும் காதலிக்க வேண்டாம்' என வலியுறுத்தும் வகையில், டி-சர்ட் அணிந்து பிரசாரம் செய்தோம்' என்றனர்.

