/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.10 லட்சத்தில் நூலகம் பணி துவக்கம்
/
ரூ.10 லட்சத்தில் நூலகம் பணி துவக்கம்
ADDED : பிப் 19, 2024 10:31 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம், இட்டிக்கல் அகரம் கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நுாலகம் அமைக்கும் பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அவரிடம் அப்பகுதி மக்கள், இங்கு கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு, 30,000 லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதம் அடைந்துள்ளது. எனவே, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றை அமைக்க வேண்டும். கிராமத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மிகவும் சேதம் அடைந்துள்ளதால், புதிய சாலை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். விரைவில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து, சாலை போடப்படும் என்று எம்.எல்.ஏ., அசோக்குமார் வாக்குறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கவுன்சிலர்கள் ஜெயராமன், காசி, பஞ்., துணைத்தலைவர் ராதிகா திருப்பதி, முன்னாள் கூட்டுறவு வங்கித்தலைவர் சூர்யா, ஊர்கவுண்டர் நாகராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

