/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வி.சி., கட்சியினர் சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம்
/
வி.சி., கட்சியினர் சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம்
வி.சி., கட்சியினர் சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம்
வி.சி., கட்சியினர் சார்பில் துண்டு பிரசுரம் வினியோகம்
ADDED : செப் 30, 2024 06:42 AM
ஓசூர்: கள்ளக்குறிச்சியில், வி.சி., கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் வரும் அக்., 2ல், மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடக்கிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்க வலியுறுத்தி, ஓசூர் மாநகர மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், நகரின் முக்கிய பகுதிகளில், சாலையோர வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, எம்.ஜி., ரோட்டிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணை செயலாளர் பாவேந்தன், மகளிர் அணி மாநில துணை செயலாளர் தனலட்சுமி, மாநகர தொண்டரணி அமைப்பாளர் சூரியவளவன், நகர செயலாளர் ஜிபி கிருஷ்ணன், மகளிர் அணி பொறுப்பாளர் பிருந்தா, ஒன்றிய செயலாளர் நன்னன் உட்பட பலர், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினர்.

