/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜெலட்டின் குச்சி பாக்ஸ் வெடித்து லேத் பட்டறை உரிமையாளர் பலி
/
ஜெலட்டின் குச்சி பாக்ஸ் வெடித்து லேத் பட்டறை உரிமையாளர் பலி
ஜெலட்டின் குச்சி பாக்ஸ் வெடித்து லேத் பட்டறை உரிமையாளர் பலி
ஜெலட்டின் குச்சி பாக்ஸ் வெடித்து லேத் பட்டறை உரிமையாளர் பலி
ADDED : டிச 17, 2024 07:35 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில், ஜெலட்டின் குச்சி வெடித்ததில், லேத் பட்டறை உரிமையாளர் உடல் கருகி பலியானார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலுள்ள திருப்பத்துார் சாலையில், வடமலம்பட்டி பகுதியில், சுண்டகாப்பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர், 40, என்பவர், 'லட்சுமி இன்ஜினியரிங் ஒர்க்ஸ்' என்ற பெயரில் லேத் பட்டறை நடத்தி வந்தார். அவரிடம் நேற்று
மாலை, 6:00 மணியளவில் ஜிம்மாண்டியூரை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் கொடுத்தனுப்பியதாக, ஜெலட்டின் குச்சிகளை
வைத்து பூட்டிய பாக்ஸை ஒருவர் கொடுத்துச் சென்றார். பூட்டிய பாக்ஸை, டிரிலிங் மிஷின் மூலமாக, ஜெய்சங்கர் திறக்க
முயற்சித்தபோது, பாக்ஸ் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஜெய்சங்கர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே
பலியானார். அவரின் உதவியாளர் திருப்பத்துார் மாவட்டம், நத்தம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், 36, பலத்த காயமடைந்தார். மேலும்,
அருகிலிருந்த, 2க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வெடி விபத்து நடந்த இடத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை விசாரணை நடத்தினார். அப்போது அவர், ''வெடி விபத்து
குறித்து, டிராக்டர் உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பவ இடத்தில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த
பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' எனவும் தெரிவித்தார்.

