/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : ஆக 12, 2024 06:32 AM
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையிலிருந்து நீர்திறப்பு, 1,140 கன அடியாக அதிகரித்துள்ளதால், 3 மாவட்ட மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 870 கன அடி நீர்வரத்தானது.
அணையிலிருந்து ஆற்றில், 559 கன அடி நீர் திறக்கப்பட்டது. மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதாலும், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வினாடிக்கு, 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாலும், கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து, 1,073 கன அடியாக அதிகரித்தது. இரு சிறு மதகு கள் வழியாக, 1,140 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய, 3 மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, ஆற்றில் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாமென, பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.நேற்று காலை நிலவரப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக பட்சமாக ஊத்தங்கரையில், 72.60 மி.மீ., மழை பதிவானது. அதேபோல் பாம்பாறு அணை, 62, கிருஷ்ணகிரி, 58, போச்சம்பள்ளி, 19.40, பாரூர், 15, கே.ஆர்.பி., அணை, 6.40, நெடுங்கல், 4.80, ஓசூர், 3.50, அஞ்செட்டி, 2 மி.மீ., பெய்துள்ளது.

