/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளஸ் 2 பொதுதேர்வு கிருஷ்ணகிரி 94.83 சதவீத தேர்ச்சி
/
பிளஸ் 2 பொதுதேர்வு கிருஷ்ணகிரி 94.83 சதவீத தேர்ச்சி
பிளஸ் 2 பொதுதேர்வு கிருஷ்ணகிரி 94.83 சதவீத தேர்ச்சி
பிளஸ் 2 பொதுதேர்வு கிருஷ்ணகிரி 94.83 சதவீத தேர்ச்சி
ADDED : மே 09, 2025 02:19 AM
கிருஷ்ணகிரி, பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 94.83 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 107 அரசுப்பள்ளிகள் மற்றும், 83 தனியார் மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகள் என, 190 பள்ளிகளை சேர்ந்த, 9,811 மாணவர்களும், 11,013 மாணவியர் என மொத்தம், 20,824 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில், 91.87 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 35வது இடத்தை பிடித்த நிலையில், தற்போது, 21வது இடத்திற்கு முன்னேறி உள்ளனர். தேர்வெழுதியவர்களில், 9,146 மாணவர்கள், 10,601 மாணவியர் என, 19,747 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, மாணவர்கள், 93.22 சதவீதம் பேரும், மாணவியர், 96.26 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில், 94.83 சதவீத அளவில் தேர்ச்சி விகிதம் உள்ளது.

