/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாட்டு வண்டியில் சென்று ஓட்டு சேகரித்த கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்
/
மாட்டு வண்டியில் சென்று ஓட்டு சேகரித்த கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்
மாட்டு வண்டியில் சென்று ஓட்டு சேகரித்த கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்
மாட்டு வண்டியில் சென்று ஓட்டு சேகரித்த கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்
ADDED : ஏப் 01, 2024 04:06 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக ஜெயப்பிரகாஷ் போட்டியிடுகிறார். மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் இவர், ஊத்தங்கரை தொகுதியில் வயலில் இறங்கி, அங்கு வேலை செய்த பெண்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். பர்கூரில் உள்ள ஒரு டீக்கடையில், வாக்காளர்களுக்கு டீ போட்டு கொடுத்து ஓட்டு சேகரித்தார். ஓசூர் அடுத்த சானமங்கலம் கிராமத்தில், மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டியுடன் சேர்ந்து, மாட்டு வண்டியை ஓட்டியவாறு வீதிகள் தோறும் சென்று, வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
தொடர்ந்து, சூடுகொண்டப்பள்ளி, நந்திமங்கலம், பாகலுார், தேவிரப்பள்ளி, முதுகானப்பள்ளி, பட்டுவாரப்பள்ளி, பெலத்துார் உள்ளிட்ட, 48 இடங்களில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமியுடன் சென்று, அ.தி.மு.க., ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி, வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, துணைத்தலைவர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், துணை செயலாளர் நவீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

