/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
/
தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
ADDED : நவ 12, 2024 01:17 AM
போச்சம்பள்ளி, நவ. 12-
போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி - காவேரிப்பட்டணம் செல்லும் சாலையிலுள்ள டேம்காவாய் பகுதியில் இருந்து மாரிசெட்டிஹள்ளி, ஜெய்னுார் வழியாக பேரூஹள்ளி வரை, 4 கி.மீ., தொலைவிற்கு உள்ள சாலை கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலையாக அமைக்கப்பட்டது. அதன்பின் சாலை சேதமடைந்து ஜல்லி பெயர்ந்து மண் சாலையாக காட்சியத்தது. அப்பகுதி விவசாயிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்டோர் இந்த சேதமான சாலை வழியாக, வாகனங்களிலும், அரசு பஸ்களிலும் சென்று சிரமப்பட்டு வந்தனர். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லும் செல்லவும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இது குறித்த செய்தி கடந்த ஆக., 20ல் நம், 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது. இதையடுத்து கடந்த, 2 மாதங்களுக்கு முன் ஜல்லி மற்றும் செம்மண் கொட்டி சாலை பணி தொடங்கியது. நேற்று தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்பகுதி மக்கள் காலைக்கதிர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

