/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் வார்டுகளில் சுகாதார பணிக்கு அறிவுறுத்தல்
/
வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் வார்டுகளில் சுகாதார பணிக்கு அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் வார்டுகளில் சுகாதார பணிக்கு அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் வார்டுகளில் சுகாதார பணிக்கு அறிவுறுத்தல்
ADDED : அக் 17, 2024 01:12 AM
வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்
வார்டுகளில் சுகாதார பணிக்கு அறிவுறுத்தல்
ஓசூர், அக். 17-
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குனருமான ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட கலெக்டர் சரயுவுடன் நேற்று மதியம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.சி.சி., நகர் பகுதிக்கு சென்றார்.
அங்கு, வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அவர், தர்கா ஏரியிலிருந்து சின்னாறுக்கு கே.சி.சி., நகர் வழியாக செல்லும் உபரி நீர் கால்வாயை பொக்லைன் வாகனம் மூலம் துார்வாரும் பணியை பார்வையிட்டு, மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாத வகையில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்களில் உள்ள செடி, கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை துார்வார மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
'ஓசூர் மாநகராட்சி பகுதிகளில், வடகிழக்கு மழை துவங்கும் முன், அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் நபர்களை பத்திரமாக மீட்டு, தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்க வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த்திடம் கூறினார்.
ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, நலப்பணிகள் இணை இயக்குனர் தருமர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஞானமீனாட்சி, மாநகர நல அலுவலர் பிரபாகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

