/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 'வாழ்வியல் வழிகாட்டி' நிகழ்ச்சி
/
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 'வாழ்வியல் வழிகாட்டி' நிகழ்ச்சி
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 'வாழ்வியல் வழிகாட்டி' நிகழ்ச்சி
பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 'வாழ்வியல் வழிகாட்டி' நிகழ்ச்சி
ADDED : செப் 16, 2024 02:38 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லுாரியில் இயங்கி வரும், 'அகப்பொறி' அமைப்பின் 'வாழ்வியல் வழிகாட்டி' நிகழ்ச்சி நடந்தது.
பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் மலர் முன்னிலை வகித்தார். இயக்குனர் சுதாகரன், பாலிடெக்னிக் முதல்வர் பாலசுப்பிரமணியம் பேசினர். பெருந்துறை ரவிக்குமார், 'மனச பாத்துக்க, நல்லபடி' என்ற தலைப்பில் பேசுகையில், ''மாணவர்கள், தங்கள் உடல் நலத்தை பேணி பாதுகாப்பதை போல், மனநலத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், மனம் தான் நம்மை வழிநடத்தும் மகா சக்தி படைத்தது. அந்த மனதை செம்மைப்படுத்த, நெறிப்படுத்த, நேர்வழிப்படுத்த நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். நல்லோர்கள் உரைகளை கேட்க வேண்டும். நேர்மறை சிந்தனை கொண்ட மனமாக நம் மனதை மாற்றி கொள்ள வேண்டும்,'' என்றார். அகப்பொறி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.