/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய் துறை ஓய்வுபெற்ற நண்பர்கள்; 11ம் ஆண்டு 'ஒன்று கூடல்' நிகழ்ச்சி

ADDED : செப் 30, 2024 06:41 AM
கிருஷ்ணகிரி: வருவாய்த்துறை ஓய்வு பெற்ற நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், 11ம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த்துறை ஓய்வுபெற்ற நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், 11ம் ஆண்டு ஒன்று கூடல் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. அறக்கட்டளை செயலாளர் அர்ச்சுனன் வரவேற்றார். தலைவர் சுப்பிரமணியம் பேசினார். கமலா அர்ஜூனன், ஜெயந்தி பாலஷண்முகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். இதில், உடல் நலம் பேணிக்காத்தல் குறித்து டாக்டர் ஜோ அண்ணாஜி அறிவுரை வழங்கினார். அவரிடம், ஓய்வுபெற்ற வருவாய்த்துறையினர் உடல் நலம் பற்றிய பல்வேறு சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
இக்கூட்டத்தில், மின்துறை ஓய்வு சங்க செயலாளர் சந்திரசேகரன், ஓய்வு டி.எஸ்.பி., திருநாவுக்கரசு, நீதித்துறை சங்க மாவட்டத் தலைவர் கோபிநாதராவ், சர்வே துறை சிவராஜ், கல்வித்துறை கோவிந்தராஜூலு ஆகியோர் பேசினர். நீதித்துறை ராஜாமணி நன்றி கூறினார். இதில், 200க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை பொருளாளர் பாலஷண்முகம் தொகுத்து வழங்கினார்.