/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெனுகொண்டாபுரம் ஏரி பகுதியில் தீ
/
பெனுகொண்டாபுரம் ஏரி பகுதியில் தீ
ADDED : ஏப் 29, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அருகே, 1,000 ஏக்கர் பரப்பளவில் பெனுகொண்டாபுரம் ஏரி அமைந்துள்ளது.
இதில், 400 ஏக்கர் அளவிற்கு தைலம், கருவேலம் மரங்கள், செடி, கொடிகள் படர்ந்துள்ளது. தற்போது கடும் வறட்சியால் இவை காய்ந்து வெறுமனே காட்சி அளிக்கிறது. அதற்கு சமூக விரோதிகள் சிலர், நேற்று மதியம், 1:00 மணியளவில் தீ வைத்துள்ளனர். இதனால் செடி, கொடிகளில் தீ மளமளவென பரவியது. போச்சம்பள்ளி தீயணைப்புத்துறை நிலைய பொறுப்பு துணை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் வந்து, போராடி தீயை அணைத்தனர்.

