ADDED : பிப் 20, 2025 01:58 AM
இதற்கிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், அஞ்செட்டி வனச்சரகத்தில், 50க்கும் மேற்பட்ட நிரந்தர யானைகள் உள்ளன. அஞ்செட்டி வனத்திற்கு நடுவேதான், ஒகேனக்கல் செல்ல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சென்றால், வனத்தின் அழகை ரசித்துச் செல்லலாம் என்பதால், ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணியர், இச்சாலையில் தான் அதிகமாக பயணிக்கின்றனர்.
மாலை, 6:00 மணிக்கு மேல் இச்சாலையை யானைகள் கடக்கும் என்பதால், அந்த நேரத்தில் பயணிக்க வேண்டாமென, வாகன ஓட்டிகளை வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். ஆனால், அதையும் மீறி அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.
நேற்று முன்தினம் காலையில், கேரட்டி அருகே ஒற்றை பெண்யானை சாலையில் முகாமிட்டது. இதனால் அச்சாலையில் சென்ற அரசு பஸ் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, யானை செல்லும் வரை காத்திருந்து, அதன்பின் சென்றனர்.

