/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சியில் குடிநீர் பிரச்னை; மழை வேண்டி துக்ளம்மா கோவிலில் சிறப்பு பூஜை

ADDED : மார் 14, 2024 06:48 AM
ஓசூர் : ஓசூர் மாநகராட்சியில், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், மழை வேண்டி துக்ளம்மா கோவிலில் கிடா வெட்டி படையலிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் பருவமழை பொய்த்து போனதால், மாநகராட்சியில் மொத்தமுள்ள, 554 போர்வெல்களில், 40 சதவீதத்திற்கும் மேல் வரண்டு விட்டன. அதனால், மாநகராட்சியிலுள்ள, 45 வார்டுகளிலும், 6 முதல், 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் நடக்கிறது. நீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஓசூரில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ள ராமநாயக்கன் ஏரி நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது. ஏரிக்குள் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமையான துக்ளம்மா கோவில் உள்ளது.
ஏரி முழுவதும் தண்ணீர் இருக்கும்போது, இக்கோவில் நீருக்குள் மூழ்கியிருக்கும். ஏரியில், தற்போது தண்ணீர் குறைந்து விட்டதால், கோவில் வெளியே தெரிகிறது. இக்கோவிலில், சிறப்பு பூஜை செய்தால் மழை வரும் என்பது, ஓசூர் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதன்படி, இக்கோவிலில் ஏரித்தெருவை சேர்ந்த மக்கள், சிறப்பு பூஜை செய்து, மழை வேண்டி நேற்று வழிபட்டனர்.மேலும், மந்தை மாரியம்மன் கோவில் டிரஸ்ட் சார்பிலும், அம்மனுக்கு கிடா வெட்டி படையல் போட்டு சிறப்பு பூஜை நடந்தது.