/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு; 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்
/
கிருஷ்ணகிரியில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு; 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்
கிருஷ்ணகிரியில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு; 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்
கிருஷ்ணகிரியில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு; 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்
ADDED : டிச 20, 2025 07:08 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் , வாக்காளர்களுக்கான சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிந்து, நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டி-யலை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்-குமார் நேற்று வெளியிட்டு பேசியதாவது:
மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்ப-னஹள்ளி, ஓசூர், தளி உள்ளிட்ட, 6 சட்டசபை தொகுதிகள் உள்-ளன. அதன்படி ஊத்தங்கரை தொகுதியில், 1,14,678 ஆண்கள், 1,13,871 பெண்கள், இதரர், 45 பேர் உள்பட, 2,28,594 வாக்கா-ளர்கள் உள்ளனர். பர்கூரில், 1,14,187 ஆண்கள், 1,16,415 பெண்கள், இதரர், 15 பேர் என, 2,30,617 வாக்காளர்கள், கிருஷ்-ணகிரி தொகுதியில், 1,26,308 ஆண்கள், 1,31,135 பெண்கள், இதரர், 58 பேர் உள்பட, 2,57, 501 வாக்காளர்கள்.
வேப்பனஹள்ளியில், 1,20,108 ஆண்கள், 1,16,637 பெண்கள், இதரர், 35 பேர் உள்பட, 2,36,780 வாக்காளர்கள், ஓசூரில், 1,62,777 ஆண்கள், 1,61,941 பெண்கள், இதரர், 73 உள்பட, 3,24,791 வாக்காளர்கள், தளியில், 1,16,098 ஆண்கள், 1,11,659, இதரர், 37 பேர் உள்பட, 2,27,794 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முடிந்து மாவட்-டத்தில், 7,54,156 ஆண்கள், 7,51,658 பெண்கள், 263 இதரர் உள்பட 6 சட்டசபை தொகுதிகளில், 15,06,077 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்-ளபட்டு, இறந்தவர்கள், முகவரியில் வசிக்காதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இருமுறை பதிவு என வாக்காளர் பட்டி-யலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்
பட்டுள்ளது.
அதன்படி, ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில், 22,757, வாக்கா-ளர்கள், பர்கூர் - 25,748, கிருஷ்ணகிரி - 25,461 வேப்பன-ஹள்ளி - 28,623, ஓசூர் - 43,646, தளி சட்டசபை தொகுதியில், 28,314 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் கிருஷ்ணகிரிக்கு இடம் பெயர்ந்தோர், புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க விண்ணப்பிக்-கலாம். வாக்காளர் இறுதி பட்டியல், 2026 பிப்., 17ல் வெளியி-டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், தேர்தல் தாசில்தார் சம்பத் மற்றும் துறை சார்ந்த அலு-வலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

