/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பன்றிவெடியை கடித்ததால் நாய் தலை சிதறி பலி
/
பன்றிவெடியை கடித்ததால் நாய் தலை சிதறி பலி
ADDED : மே 04, 2025 01:12 AM
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அடுத்த அகலக்கோட்டை அருகே வசிப்பவர் முத்தப்பா, 70; விவசாயி. இவருக்கு சொந்தமான கன்றுகுட்டியை கடந்த சில மாதங்களுக்கு முன், ஒற்றை யானை தாக்கி கொன்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள பாறை பகுதியில் இருந்து கடும் சத்தம் கேட்டது. வீட்டிலிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் சத்தம் வந்த பகுதிக்கு சென்று பார்த்த போது, முத்தப்பா வளர்த்து வந்த நாய், தலை சிதறி இறந்து கிடந்தது.
அப்பகுதியில் காட்டு பன்றிகளுக்கு வைத்த வெடியை, அங்கு சுற்றித்திரிந்த நாய் கடித்ததில், அது தலை சிதறி பலியானது தெரிந்தது. காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்படும் வெடிகளில் சிக்கி வன உயிரினங்கள் மற்றும் வீட்டு செல்ல பிராணிகள் பலியாகி வருகின்றன. எனவே, வனத்
துறையினர் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு, வெடி வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

