/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.48 லட்சம் வருவாய் இழப்புகுப்பை வரியை கண்டித்து தி.மு.க.,கவுன்சிலர் வெளிநடப்பு
/
ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.48 லட்சம் வருவாய் இழப்புகுப்பை வரியை கண்டித்து தி.மு.க.,கவுன்சிலர் வெளிநடப்பு
ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.48 லட்சம் வருவாய் இழப்புகுப்பை வரியை கண்டித்து தி.மு.க.,கவுன்சிலர் வெளிநடப்பு
ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.48 லட்சம் வருவாய் இழப்புகுப்பை வரியை கண்டித்து தி.மு.க.,கவுன்சிலர் வெளிநடப்பு
ADDED : ஏப் 26, 2025 01:37 AM
ஓசூர்:ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் அவசர கூட்டம், மேயர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் மாரிச்செல்வி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
மேயர்: மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணி நடக்காத வார்டுகளில் சாலை பணிகள் மேற்கொள்ள, 14.63 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.துணை மேயர்: அரசு புறம்போக்கு நிலங்களில், குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க சர்வே செய்யாமல் வருவாய்த்துறை உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.கமிஷனர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன்: பொது சுகாதாரக்குழு தலைவரான எனது பேச்சை கூட அதிகாரிகள் கேட்பதில்லை. ராஜினாமா செய்து விட்டு தான் செல்ல வேண்டும். ஓசூர் பஸ் ஸ்டாண்டிற்கு தகுதி சான்றை புதுப்பித்து, ஒப்பந்ததாரருக்கு பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியிருக்கலாம். அல்லது மாநகராட்சி நிர்வாகம் பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் உள்ளதால், 48 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆடிட்டர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கமிஷனர்: 48 லட்சம் இழப்பு ஏற்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மூன்று நாட்களாக மாநகராட்சியே நுழைவு கட்டணம் வசூலிக்கிறது.
அ.தி.மு.க., கவுன்சிலர் சிவராமன்: 17, 18, 19, 20 ஆகிய வார்டுகளில் உள்ள போர்வெல்களில், தண்ணீர் நிறம் மாறி வருவதால் பயன்படுத்த முடியவில்லை. சிப்காட்டில் விதியை மீறி தனியார் நிறுவனங்கள் போர்வெல் அமைக்கின்றனர். அது வறண்டு போனால், அதற்குள் கழிவு நீரை விடுகின்றனர். நாங்கள் உயிரோடு இருக்கவா அல்லது சாகவா என, கலர் மாறி வந்த நீரை காட்டினார்.
கமிஷனர்: அடுத்த வாரத்திற்குள், மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., சென்னீரப்பா: 2017ல், அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலுவையுடன் குப்பை வரி, 17 கோடி ரூபாய் உள்ளது. அ.தி.மு.க., அரசால் கொண்டு வரப்பட்ட குப்பை வரி நிலுவை தொகையை, தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அப்போது குறுக்கிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்கள், அ.தி.மு.க., ஆட்சியில் குப்பை வரியை நாங்கள் வசூல் செய்யவில்லை. அதேபோல், நீங்கள் வசூல் செய்யாமல் இருங்கள் என கூறினர். அதற்கு பதிலளித்து தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க.,வினர், மேயரை பேச விடாமல் கூச்சலிட்டு கொண்டிருந்ததால், அவர்களது மைக் அணைக்கப்பட்டது. கடைசியில், தி.மு.க., கவுன்சிலர் சென்னீரப்பா, குப்பை வரியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு செய்தார்.

