/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
23ல் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
/
23ல் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
23ல் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
23ல் கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 17, 2025 08:00 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோட்ட அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் வரும், 23ல், கிருஷ்ணகிரி கோட்ட அலுவலகத்தில் காலை, 10:00 மணியளவில் நடக்கிறது. அஞ்சல் வாடிக்கையா-ளர்கள் தங்கள் புகார்களை வரும், 22க்குள், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி 635 001 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
அஞ்சல் துறையின் மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார்கள் இருந்தால் அது தொடர்பான பதிவு எண், பதிவு செய்-யப்பட்ட தேதி மற்றும் அலுவலகம் போன்ற முழு விபரங்கள் இருக்க வேண்டும்.அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார் இருந்தால், அது தொடர்பான முழு கணக்கு எண், ஆயுள் காப்பீடு பாலிசி எண், வைப்பாளர் மற்றும் காப்பீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவல-கத்தின் பெயர் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும். புகாரை அனுப்பும் அஞ்சல் உறையின் மீது 'தாக் அதாலத் கேஸ்,' என குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

