/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு 'சீல்' வைக்க தாமதம்
/
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு 'சீல்' வைக்க தாமதம்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு 'சீல்' வைக்க தாமதம்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு 'சீல்' வைக்க தாமதம்
ADDED : ஏப் 21, 2024 01:49 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்திற்கு, 'சீல்' வைக்க மிகவும் கால
தாமதம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள், போலீசார் கடும் சிரமத்திற்கு
ஆளாகினர்.
தமிழகத்தில், நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல்
நடந்தது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் சில கிராமங்களில் தேர்தல்
புறக்கணிப்பு, பல ஓட்டுச்சாவடிகளில், நுாற்றுக்கணக்கானோர் பெயர்
இல்லாமல் போனதால், ஓட்டுப்பதிவில் பிரச்னை ஏற்பட்டது.
அப்பகுதிகளில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும்,
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கோளாறான இடத்தில், கூடுதல் நேரம்
கொடுத்தும், தேர்தலை நடத்தினர்.
நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியை
கடந்தும், பல பகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதையடுத்து
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, 'சீல்' வைத்து, அதில் விபரங்களை எழுதி
ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது.
நேற்று அதிகாலை வரை ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டு எண்ணும் மையம்
அமைந்துள்ள, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக்கில் சட்டசபை தொகுதி
வாரியாக பிரித்தனுப்பும் பணி நடந்தது.
இது குறித்து அதிகாரிகள்
சிலர் கூறுகையில், 'கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக்கில், லோக்சபா
தொகுதி ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சட்டசபை
தொகுதி வாரியாக, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பிரித்து வைக்கும்
பணியில், 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறோம். இவற்றில்
போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு, 'ஷிப்ட்' கணக்கில்
நேரமாற்றம் உள்ளது. ஆனால், நேற்று முன்தினம் மாலை முதல்,
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து அடுத்த, 'ஷிப்ட்'
பணியாளர்களுக்கு ஒப்படைக்க முடியாமல், அதிகாரிகள் மற்றும்
போலீசார் தவித்தனர்.
மேலும், நேற்று முன்தினம் காலை முதல் போலீசார்
மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டனர். அவர்களும் தொட ர்ந்து
பணியாற்றும் சூழல் ஏற்பட்டது. தவிர அந்தந்த அரசியல் கட்சியினரும்
காத்து கிடந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை, கலெக்டர், சப்
கலெக்டர், தேர்தல் அலுவலர்களில் பலர் அனுபவமில்லாமல் உள்ளனர். தளி
தொகுதியில், ஓட்டுச்சாவடி விபரங்கள் கூட எழுதாமல், அலுவ லர்கள்
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பியுள்ளனர். இதனால், நேற்று
மதியம், 3:00 மணிக்கே, ஓட்டு எண்ணும் மையத்தில், ஓட்டுப்பதிவு
இயந்திரங்கள் வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது' என்றனர்.

