/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகர் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம்
/
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகர் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகர் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகர் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 19, 2024 06:51 AM
கிருஷ்ணகிரி : தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இது குறித்து, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் இன்று (ஏப். 19) லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், தொழிலாளர்கள் ஓட்டளிக்க ஏதுவாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களுடன் கிருஷ்ணகிரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு, தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) மஞ்சள்நாதன் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தர்மபுரியில் நடந்த கூட்டத்திற்கு, தொழிலாளர் துணை ஆய்வாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள், சங்கத்தலைவர், செயலாளர், சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இன்று (ஏப்.19) நடக்க உள்ள லோக்சபா தேர்தலையொட்டி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு, 135 பியின் படி, அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு விடுமுறை அளிக்கவில்லை என புகார் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு வராத பணியாளர்களின் சம்பளத்தில் எந்தவித பிடித்தமும் செய்யக்கூடாது. மேலும், இது குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

