/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் பி.எம்.சி., டெக் பாலிடெக்னிக்கில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

ADDED : ஆக 29, 2024 07:37 AM
ஓசூர்: ஓசூர், பி.எம்.சி., டெக் பாலிடெக்னிக் கல்லுாரியில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் சார்பில், ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேசன் பிரிவில், 6 நாள் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட பயிற்சி நடந்தது. இதன் நிறைவு விழா, பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் மலர் குத்துவிளக்கேற்றி, விழாவை துவக்கி வைத்தார். இன்ஜினியரிங் கல்லுாரி சர்வதேச உறவு துறை டீன் ரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.
கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு பேசும் போது, இப்பயிற்சியில் ஆசிரியர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை, மாணவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் தொழில்நுட்பத்திறனை வளர்த்து கொண்டு, சமகால சிக்கல்களை தீர்க்கும் வண்ணம் செயல்பட கேட்டுக்கொண்டார்.
ஏற்பாடுகளை, கருவி மற்றும் அச்சு பொறியியல் துறை தலைவர் ராமச்சந்திரன், எலெக்ட்ரானிக்ஸ் ரோபோடிக்ஸ் துறைத்தலைவர் வீரமணி ஆகியோர் செய்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள பாலிடெக்னிக் கல்லுாரியை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.