/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓய்வூதியர்களுக்கு டி.ஏ., உயர்வு பெற்று தந்தவர்களுக்கு பாராட்டு
/
ஓய்வூதியர்களுக்கு டி.ஏ., உயர்வு பெற்று தந்தவர்களுக்கு பாராட்டு
ஓய்வூதியர்களுக்கு டி.ஏ., உயர்வு பெற்று தந்தவர்களுக்கு பாராட்டு
ஓய்வூதியர்களுக்கு டி.ஏ., உயர்வு பெற்று தந்தவர்களுக்கு பாராட்டு
ADDED : டிச 18, 2025 06:20 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கம் சார்பில், கடந்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டு டி.ஏ., உயர்வு பெற்றுத்தந்தவர்களுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.
மாநில துணைத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் மணி, மண்டல தலைவர் கேசவசெட்டி, மண்டல பொருளாளர் சுகஸ்திரன், துணைத்தலைவர் வெங்கடேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர்கள் சிவப்பிரகாசம், தென்னரசு, மாதுசாமி ஆகியோர் பேசினர். துணைச்செயலாளர் காளிதாசன் நன்றி கூறினார்.இதில், உலக ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்பட்டது. மேலும், கடந்தாண்டு டிச., 17 உலக ஓய்வூதியர் தினத்தில், சென்னை பல்லவன் சாலையில் அரை நிர்வாண போராட்டத்தில் பங்கேற்று, ஓய்வூதியர்கள், 15,000 பேருக்கு டி.ஏ., உயர்வு பெற்றுத் தந்தவர்களுக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரை நிர்வாண போராட்டத்திற்கு, பெரும் ஆதரவு அளித்த தொழிற்சங்க தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நீதிமன்றங்களில் டி.ஏ., உயர்வுக்காக தனியாகவும், குழுக்களாகவும் வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

