/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்'
/
'மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்'
'மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்'
'மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்'
ADDED : பிப் 15, 2024 10:42 AM
வேலுார்: ''மத்திய, மாநில அரசுகள், கல்விக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்,'' என, வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் பேசினார்.
வேலுார் வி.ஐ.டி., வளாகம் மற்றும் சென்னை கிளை அலுவலக வளாகத்தில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும், 856 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்ற, 'திருக்குறள் ஒப்புவித்தல்' போட்டி கடந்த, அக்., 10 மற்றும் 11ல் நடத்தப்பட்டது. இதில் ஒரே நேரத்தில், 856 பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றதற்காக, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம், வழங்கிய உலக சாதனைக்கான சான்று வழங்கும் விழா நேற்று, வேலுார் காட்பாடியிலுள்ள வி.ஐ.டி., வளாகத்தில் நடந்தது. இதற்கான சான்றை, வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதனிடம், 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனத்தினர் வழங்கினர்.
நிகழ்ச்சியில், வி.ஐ.டி., வேந்தர் விசுநாதன் பேசியதாவது:
மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு ஒதுக்கும் நிதி போதுமானதல்ல. எனவே போதிய நிதியை ஒதுக்க வேண்டும். எந்த ஒரு நாடு கல்வி, சுகாதாரத்தை இலவசமாக தருகிறதோ, அந்த நாடுகள் நல்ல முன்னேற்றம் அடைய முடியும். நாட்டு மக்களும் இலவசமாக, மின்சாரம், வேட்டி, சேலைகளை அரசிடம் கேட்காமல், கல்வி, சுகாதாரத்தை இலவசமாக கேட்க வேண்டும். அரசு கல்லுாரிகளில் உயர் கல்விபெறும் மாணவர்களிடம், கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். கல்வியில் முன்னேற்றமடைந்தால், நம் நாடும் நல்ல முன்னேற்றமடையும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

