/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருதுவிடும் விழா 10 பேர் மீது வழக்கு
/
எருதுவிடும் விழா 10 பேர் மீது வழக்கு
ADDED : டிச 16, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி அடுத்த யானைக்கல்தொட்டியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதுகுறித்து வேப்பனஹள்ளி போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 28, உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல கந்திகுப்பம் அடுத்த சின்னபனகமுட்லுவில் அனுமதி இன்றி எருதுவிடும் விழாவை நடத்திய அப்பகுதியை சேர்ந்த ஜெயராமன், 51, பிரகாஷ், 42, முனியப்பன், 73, தியாகராஜன், 40, அருணகிரி, 55, உள்பட 5 பேர் மீது வழக்குபதிந்து கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

