/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி

ADDED : ஜூலை 27, 2025 12:59 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, வாலிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட, பெரமகவுண்டனுார் கிராமத்தில், 7 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் பழுதாகி இருந்ததால், அதை கடந்த, 6 மாதங்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தினர். மீண்டும் அதே இடத்தில் நேற்று தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் புதியதாக ரேஷன் கடை கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
அதை எதிர்த்து, அதே பகுதியில் உள்ள வேடியப்பன் குடும்பத்தினர் மற்றும் அவரின் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர் பெட்ரோல் கேனுடன், 'இது எங்களுக்கு சொந்தமான பட்டா நிலம். இதில் ரேஷன் கடை கட்டடம் கட்டக்கூடாது' என எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சித்தனர். ஆனால், அந்த இடம் மத்துார் பி.டி.ஓ., பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, மத்துார் பி.டி.ஓ., செல்லக்கண்ணாள், மத்துார் இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகியோர், தேவையானதை செய்து தருவதாக கூறி, உத்தரவாதம் அளித்ததால், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கலைந்து சென்றனர்.