/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி தொகுதி பொது பார்வையாளர் நியமனம்
/
கிருஷ்ணகிரி தொகுதி பொது பார்வையாளர் நியமனம்
ADDED : மார் 27, 2024 08:01 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பொது பார்வையாளராக கிரண் குமாரி பாசி ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். அவரை, கிருஷ்ணகிரி பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் சரயு, எஸ்.பி., தங்கதுரை சந்தித்து தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சரயு கூறுகையில், “கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து, பொது பார்வையாளர் கிரண் குமாரி பாசி ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து அவரை, 93638 68327 மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம். இவரது தொடர்பு அலுவலராக தாசில்தார் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 99441 33548 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,” என்றார்.

