/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாட்கோவில் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது
/
தாட்கோவில் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது
தாட்கோவில் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது
தாட்கோவில் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது
ADDED : மார் 10, 2024 03:37 AM
கிருஷ்ணகிரி: தாட்கோவில் தனி நபர் கடன் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அப்பினாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன், 46. இவர், தன்னை தாட்கோ களப்பணியாளர் எனக் கூறி, போலியாக அரசு அடையாள அட்டை அணிந்து, தாட்கோ திட்டத்தில் தனிநபர் கடன் உடனடியாக பெற்று தருவதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்து வந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து மாவட்ட கலெக்டர் சரயுவுக்கு புகார் அளிக்கப்பட்டது. விசாரிக்க மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டதையடுத்து, குணசேகரன் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ அலுவலகம் அறை எண், 59-ல், புதிய அலுவலக அறை எண், 132-ல் செயல்படுகிறது. தாட்கோ மானிய கடன் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்து பதிவேற்றம் செய்ய முடியும். தாட்கோ கடன் குறித்து பேசும் போலியானவர்களை நம்ப வேண்டாம். மேலும், 04343- 238881 மற்றும் 94450 29464 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

