/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 650 போலீசார் பாதுகாப்பு பணி
/
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 650 போலீசார் பாதுகாப்பு பணி
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 650 போலீசார் பாதுகாப்பு பணி
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 650 போலீசார் பாதுகாப்பு பணி
ADDED : ஜன 01, 2026 07:42 AM
கிருஷ்ணகிரி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும், 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயிவே ஸ்டேஷன், முக்கிய இடங்-களில் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள், 5
டி.எஸ்.பி.,க்கள், 33 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம், 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எஸ்.ஐ.,க்கள் தலைமையில், 7 அதிரடிப்படை மாவட்டம்
முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மது போதையில் வாகனங்களை ஓட்-டுவது, வீலிங் செய்வதை தவிர்க்க
வேண்டும். அவ்வாறு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, மதுபானம், கள்ளச்சாராய விற்பனை, மணல் கடத்தல், பனங் கள் விற்பனை, விபசார தொழிலில் ஈடுபடுபவர்கள் பற்றி
தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் போலீசாருக்கு, 94981 81214 என்ற மொபைல் எண்ணிலோ, 'வாட்ஸாப்' மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

