/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு 41 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்
/
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு 41 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு 41 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு 41 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்
ADDED : மார் 28, 2024 02:28 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில் போட்டியிட, 34 பேர், 41 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகம்
முழுவதும் வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலில்
போட்டியிட கடந்த, 20ல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று மதியம், 3:00
மணிக்கு முடிந்தது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய, கிருஷ்ணகிரி மாவட்ட
கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் ஆகிய இரு இடங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டன.
கடந்த, 20ல் ஒருவரும், 22ல் இருவரும் வேட்புமனு
தாக்கல் செய்தனர். விடுமுறை நாட்களான, 23, 24ம் தேதியை தொடர்ந்து
கடந்த, 25ல், முக்கிய கட்சிகளான காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., -
நா.த.க., கட்சி வேட்பாளர்கள் உட்பட, 16 பேர் தங்கள் வேட்புமனுக்களை
தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம், 7 சுயேச்சைகளும், கடைசி நாளான
நேற்று, 15 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மதியம், 3:00
மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது.
அதன்படி, மொத்தம்,
41 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுத்தாக்கல்
செய்த அனைவரும், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே
தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

