/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
3 கிராம மக்களுக்கு இலவச பட்டாசு
/
3 கிராம மக்களுக்கு இலவச பட்டாசு
ADDED : அக் 29, 2024 01:01 AM
3 கிராம மக்களுக்கு இலவச பட்டாசு
ஓசூர், அக். 29-
ஓசூர் அருகே, பாரந்துார் கிராமத்தில், ஏழை, எளிய கிராம மக்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு இலவச பட்டாசு, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார் தலைமை வகித்தார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், மாசிநாயக்கனப்பள்ளி, முகளூர், எஸ்.,முதுகானப்பள்ளி ஆகிய பஞ்.,க்களை சேர்ந்த ஏழை, எளிய மக்கள், 2,000 பேருக்கு பட்டாசு பாக்ஸ், இனிப்பு என மொத்தம், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கி, தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் புஷ்பா சர்வேஷ், ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

