/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவ, மாணவியருக்கு 220 விலையில்லா சைக்கிள்
/
மாணவ, மாணவியருக்கு 220 விலையில்லா சைக்கிள்
ADDED : ஆக 12, 2024 06:39 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., 220 மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பாலிநாயனப்பள்ளி பஞ்., செட்டிப்பள்ளி ஊராட்சி, அழகியபுதுார் ஊராட்சி பள்ளிகளுக்கு, புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல, 30.45 லட்சம் ரூபாயில், குண்டியால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்டடம், 12 லட்சம் ரூபாயில், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளதை திறந்து வைத்தார். மேலும், 40 லட்சம் ரூபாயில், ஒப்பதவாடி சாலை முதல் பாரதகோவில் வரை தார்ச்சாலையும், 34.92 லட்சம் ரூபாயில், புதுரோடு தேசிய நெடுஞ்சாலை முதல் நெல்லிகான் வட்டம் வரை தார்ச்சாலையும், 9.85 லட்சம் ரூபாயில், குண்டியால்நத்தம் தேசிய நெடுஞ்சாலை முதல் ஜெயராமன் வட்டம் வரை தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளை பூஜை செய்து துவக்கி வைத்தார். மல்லப்பாடி பஞ்.,த்தில், 44 லட்சம் ரூபாயில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கட்டப்பட்ட, 3 புதிய வகுப்பறைகளை, மதியழகன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

