/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
த.வெ.க.,வினர் 20 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
த.வெ.க.,வினர் 20 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜூலை 25, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி பஞ்., வெப்பாலம்பட்டியை சேர்ந்த, தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் ரகு, இளையராஜா, சிலம்பரசன், வினோத், பிரபாகரன், திம்மப்பன் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களை சால்வை அணிவித்து வரவேற்ற மதியழகன் எம்.எல்.ஏ., சிறப்பாக கட்சி பணியாற்ற கூறினார்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தசாமி, வாசு மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

