/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தர்கா உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது
/
தர்கா உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது
ADDED : டிச 27, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்கா உண்டியலில் பணம்
திருடிய 2 பேர் கைது
ஓசூர், கெலமங்கலம், அண்ணா நகரை சேர்ந்தவர் சிக்கிரியா, 35. இவர், அப்பகுதி பாபா தர்காவில் பொறுப்பாளராக இருந்து வருகிறார். கடந்த, 25 அதிகாலை அங்கு வந்த இருவர், தர்காவில் மேற்கூரை வழியாக உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த உண்டியலில் இருந்து, 1,200 ரூபாயை திருடினர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் தேன்கனிக்கோட்டை அடுத்த பிதிரெட்டி சரவணன், 30, சக்தி, 22, என தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

