/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டில் பதுக்கிய 159 பட்டாசு பாக்ஸ் பறிமுதல்
/
வீட்டில் பதுக்கிய 159 பட்டாசு பாக்ஸ் பறிமுதல்
ADDED : அக் 28, 2024 03:35 AM
ஓசூர்: தமிழக-கர்நாடகா எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை சூடுபிடித்-துள்ளது. கர்நாடகா மாநில மக்கள் அதிகளவில் பட்டாசு வாங்க ஓசூருக்கு வந்து செல்கின்றனர். இதனால் அதிக விற்பனையை குறிவைத்து, வீடுகள் மற்றும் குடோன்களில் பட்டாசுகளை பதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஓசூர் ஜூஜூவாடி வி.ஏ.ஓ., பிரபாகரன், எழில் நகரில் ஒரு வீட்டில், பட்டாசு பதுக்கி வைத்துள்ளதாக, சிப்காட் போலீசில் புகார் செய்தார். அங்கு சென்ற எஸ்.ஐ., சிரஞ்சீவி குமார் தலைமையிலான போலீசார், 40,000 ரூபாய் மதிப்புள்ள, 159 பட்டாசு பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜூஜூவாடியில் பட்டாசு கடை நடத்தி வரும், திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த பாலாஜி, 28, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

