/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி நடை பேரணி
/
100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி நடை பேரணி
ADDED : மார் 24, 2024 01:50 AM
ஓசூர், கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் 'தேர்தல் திருவிழா தேசத்தின் பெருமை' என்ற இலக்கை நோக்கிய நடைபேரணி நேற்று நடந்தது. ஓசூர், காமராஜ் காலனி விளையாட்டு மைதானத்தில் இருந்து துவங்கிய நடைபேரணியை, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சரயு கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். காமராஜ் காலனி சாலை, தாலுகா அலுவலக சாலை வழியாக சென்ற பேரணி, சப் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர், ஆராதனா தொண்டு நிறுவன பிரதிநிதிகள், வருவாய்த்துறை ஊழியர்கள், வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா, சப் கலெக்டர் பிரியங்கா, தாசில்தார் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, தமிழக எல்லையிலுள்ள ஜூஜூவாடி போலீஸ் சோதனைச்சாவடிக்கு சென்ற, மாவட்ட கலெக்டர் சரயு, வாகன சோதனையை பார்வையிட்டார். ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் உடனிருந்தார்.

