/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு கடந்த முறையை விட 4.39 சதவீதம் குறைவு

ADDED : ஏப் 21, 2024 01:49 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், கடந்த தேர்தலை விட, 4.39 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளன.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. காலை, 7:00 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை, 6:00 மணிக்கு முடிந்தது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது, சில இடங்களில் வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பு என சிறு சிறு பிரச்னைகள் இருந்தது. தேர்தல் புறக்கணிப்பு கிராமங்களில் உள்ள சில இடங்களில் மக்கள் நேற்று மாலை ஓட்டுப்பதிவு செய்தனர். இந்நிலையில், ஓட்டுப்பதிவு கணக்கிடப்பட்டு, கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், 71.50 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண் வாக்காளர்கள், 5,87,007 பேரும், பெண் வாக்காளர்கள், 5,73,412 பேரும், மூன்றாம் பாலினத்தவர், 79 பேரும் என மொத்தம், 11,60,498 வாக்காளர்கள் ஓட்டளித்து உள்ளனர்.
கடந்த, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை ஒப்பிடும்போது, இம்முறை, 4.39 சதவீத ஓட்டுக்கள் குறைந்துள்ளது. அதாவது கடந்த, 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், 75.89 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.