/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எஸ்.எஸ்.ஐ., - ஏட்டு மீது தாக்குதல் தி.மு.க., கவுன்சிலர் உட்பட இருவர் கைது
/
எஸ்.எஸ்.ஐ., - ஏட்டு மீது தாக்குதல் தி.மு.க., கவுன்சிலர் உட்பட இருவர் கைது
எஸ்.எஸ்.ஐ., - ஏட்டு மீது தாக்குதல் தி.மு.க., கவுன்சிலர் உட்பட இருவர் கைது
எஸ்.எஸ்.ஐ., - ஏட்டு மீது தாக்குதல் தி.மு.க., கவுன்சிலர் உட்பட இருவர் கைது
ADDED : ஏப் 23, 2024 04:04 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், எஸ்.எஸ்.ஐ., மற்றும் ஏட்டு மீது தாக்குதல் நடத்திய, தி.மு.க., கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, சந்தப்பட்டி சூரப்பட்டியை சேர்ந்தவர் சிங்காரம், 25; பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரும், எஸ்.எஸ்.ஐ., நாகேந்திரனும், கடந்த, 20 ல் இரவு, தமாணி கொம்பை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன், 33, அவர் தம்பி சதீஷ்குமார், 26, ஆகியோர், இரவு, 11:00 மணியளவில் நில பிரச்னை தொடர்பாக அவரது சித்தப்பா அன்புமணியையும், அக்கிராம பொதுமக்களையும் தகாத வார்த்தையால் பேசி, தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களை, ஏட்டு சிங்காரவேலு விலக்க முற்பட்டபோது அவரை, கவுன்சிலர் பிரபாகரன் ஆபாசமாக பேசினார். பின் சதீஷ்குமாருடன் சேர்ந்து, ஏட்டு சிங்காரவேலுவை தாக்கி கீழே தள்ளினார். இதை தட்டிக்கேட்ட எஸ்.எஸ்.ஐ., நாகேந்திரனையும் தாக்கினர். அப்போது, ஊர்மக்கள் ஒன்று கூடியதால், பிரபாகரன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் தப்பியோடினர்.
போலீசாரை மீட்ட பொதுமக்கள், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏட்டு சிங்காரவேலு புகார் படி, பேரூராட்சி கவுன்சிலர் பிரபாகரன், அவருடைய தம்பி சதீஷ்குமார் ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

