/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவிரியாற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
/
காவிரியாற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
ADDED : ஏப் 15, 2024 04:02 AM
ஓசூர்: திருப்பத்துார் மாவட்டம், இஸ்மாயில்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் ரூப், 37; இவர் மனைவி ஆயிஷா, 35; இவர்களது மகன் கிஷார் உசேன், 6; அப்பகுதியிலுள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்; நேற்று முன்தினம் ஆயிஷா தன் மகனை அழைத்து கொண்டு, உறவினர்களுடன் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.
அஞ்செட்டி அடுத்த பிலிகுண்டுலு ராவணன் திட்டு பகுதியில், நீண்ட நேரமாக மாணவன் கிஷார் உசேன் காவிரியாற்றில் குளித்தார். அப்போது வலிப்பு ஏற்பட்டு, ஆற்றில் மூழ்கிய மாணவனை மீட்ட உறவினர்கள், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

