/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சேலம் - பெங்., 'ஏசி' பஸ்களில் புழுக்கத்தில் தவிக்கும் பயணியர்
/
சேலம் - பெங்., 'ஏசி' பஸ்களில் புழுக்கத்தில் தவிக்கும் பயணியர்
சேலம் - பெங்., 'ஏசி' பஸ்களில் புழுக்கத்தில் தவிக்கும் பயணியர்
சேலம் - பெங்., 'ஏசி' பஸ்களில் புழுக்கத்தில் தவிக்கும் பயணியர்
ADDED : ஏப் 23, 2024 11:29 PM
ஓசூர்:பெங்களூருவில், ஐ.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. அதனால், சேலம், ஓசூரிலிருந்து தினமும், பெங்களூரு செல்வோர் அதிகமாக உள்ளனர். சேலத்தில் தற்போது, 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாகிறது. இதனால், அரசின் சாதாரண, 'ஒன் டு ஒன்' பஸ்களை விட, 'ஏசி' பஸ்களில் செல்ல பயணியர் விரும்புகின்றனர்.
சேலத்திலிருந்து பெங்களூருக்கு, 'ஏசி' பஸ்களில், 285 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலம் - பெங்களூரு இடையே தினமும் இயக்கப்படும் சில பஸ்களில், 'ஏசி' இயங்காமல் வெப்ப காற்று தான் வருகிறது. இதனால், பயணியர் புழுக்கத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் மோகன்குமாரிடம் கேட்டபோது, ''குளிர்சாதன பஸ்களை பராமரித்து தான் இயக்குகிறோம். டிப்போ மேலாளரையும், உதவி பொறியாளரையும், பஸ்சை சோதனை செய்து இயக்க அறிவுறுத்தி உள்ளோம். குறைகள் தெரிந்தால், உடனடியாக சரி செய்து விடுகிறோம்,'' என்றார்.