ADDED : செப் 12, 2024 07:11 AM
போச்சம்பள்ளி: காவேரிப்பட்டணம் ஒன்றியம், அரசம்பட்டி, பாரூர், வாடமங்-கலம் உள்ளிட்ட பஞ்.,களுக்கு சேர்த்து அரசம்பட்டி பஞ்.,ல் உள்ள பெண்டரஹள்ளி கிராமத்தில், நேற்று கலெக்டர் சரயு தலை-மையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இதில், உள்-ளாட்சி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, வேளாண், மாற்றுத் திறனா-ளிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த மாவட்ட அலுவ-லர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு துறை சார்பிலும், மக்க-ளுக்கு அரசு மூலம் கிடைக்கப்பெறும் பயன்கள், சலுகைகள் குறித்தும், அதை பெற்று பயனடைவது குறித்தும் விளக்கி பொது-மக்களுக்கு கூறப்பட்டது. இதில், கனவு இல்ல திட்டம், ஜாதிச்-சான்று பெறுதல், வீட்டுமனை பட்டா, விவசாயிகளுக்கு உபகர-ணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆர்.டி.ஓ., பாபு, துணை கலெக்டர்கள், போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரன், பஞ்., தலைவர்கள் தமிழ்ச்செல்வி சுந்தரமூர்த்தி, சிவ-லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

